63 வயதிலும் அலறவிட்ட அர்ஜுன் - "பிளாஸ்ட்" பிளாஸ்ட் தான் - திரை விமர்சனம்!
பிளாஸ்ட் திரைப்படம்
ஆக்ஷன் கிங் அர்ஜுன் 63 வயதாகியும் கூட அவரது எனர்ஜி கொஞ்சம் கூட குறையாமல் பார்த்த கண்ணுக்கு அப்படியே இருக்கிறார். அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்த நடிகர் அர்ஜுன் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் பிளாஸ்ட்.

இந்த திரைப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருக்கிறார். இவர்களுடன் ப்ரீத்தி, முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சுபாஷ் கே ராஜன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது.
விமர்சனம்:
படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள். படத்தின் முழு விமர்சனத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஆக்ஷன் கிங் அர்ஜுனின் நடிப்பை பார்க்க வேண்டும் என மிகுந்த எதிர்பார்ப்போடு சென்று ரசிகர்கள் கொஞ்சம் கூட ஏமாற்றம் அடையவில்லை.
ஆம் பிளாஸ்ட் பிளாஸ்ட்.... படத்தின் ஹீரோ மட்டும் கதையை நகர்த்தி செல்லாமல் ஹீரோ அர்ஜுனன் சேர்ந்து நடிகை அபிராமி ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் அர்ஜுனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தங்களது காட்சிகளில் அசத்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் ஹீரோவுக்கு மட்டும் இன்றி ஹீரோயின்களுக்கும் ஈடாக சண்டை காட்சிகள் பட்டாசாக வெடிக்கிறது. படத்தில் முழுக்க முழுக்க நிறைய சண்டை காட்சிகள் இடம் பெற்றாலும் அது கொஞ்சம் கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை .
கமர்சியல் என்டர்டைன்மென்ட்:

பெரும்பாலும் கதைக்கு ஒத்துப்போகிறது என்று தான் சொல்ல வேண்டும். முதல் காட்சி முடிவிலேயே படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது பிளாஸ் திரைப்படம்.
இப்படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர் படம் சிறப்பாக இருக்கிறது. நல்ல கமர்சியல் என்டர்டைன்மென்ட் என தெரிவிக்கிறார்கள். படம் ஆரம்பம் முதல் முடிவு வரை நல்ல விறுவிறுப்பாக செல்கிறது. குறிப்பாக ப்ரீத்தி முகுந்தன் ரொம்ப போல்டான பெர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் மூலமாக அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும். 63 வயதாகியும் கூட நடிகர் அர்ஜுனுக்கு கொஞ்சம் கூட அந்த எனர்ஜி குறையவில்லை. பழைய படங்களில் பார்த்தது போலவே அப்படியே அதே எனர்ஜியோடு இருக்கிறார்.
ஆக்சன் லவ்வர்களுக்கு இந்த திரைப்படம் செம ஹிட் ஆக தான் அமைந்திருக்கிறது. இன்னொரு ரசிகர் ப்ளாஸ்ட் படத்தை பார்த்துவிட்டு... முதல் பாதி முழுக்க முழுக்க ஆக்ஷன் பேக்கேஜ் தான். இரண்டாவது பாதியும் அப்படித்தான்.
தேவையில்லாத சீன் எதுவுமே இல்ல.... வில்லன் கதாபாத்திரம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும் அதனால கதையும் விறுவிறுப்பா நகருது. வீட்டில் நடக்கும் சண்டை காட்சிகள் அட்டகாசம் பிரமாதமாக இருக்கிறது. குடும்பத்தோடு இந்த ஆக்சன் படத்தை பார்த்து ரசிக்கலாம்.
அர்ஜுனுக்காக திரைப்படத்தை பார்க்க சென்றவர்கள் ஆக்சன் காட்சியோடு பார்த்து திருப்தியாக வெளியே வருகிறார்கள். அவ்வளவு சிறப்பாக கமர்சியல் வைபோடு அட்டகாசமாக இருக்கிறது. ப்ரீத்தி முகுந்தன் நடிப்பு அனைவரையும் இம்ப்ரஸ் செய்கிறது இதுவரை படம் பார்த்த எல்லோருமே படத்துக்கு ஹா ஹா ஓஹோ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
