Con City Box Office : 2 நாட்களில் அர்ஜுன் தாஸின் 'கான் சிட்டி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Con city 2 days collection

2 நாட்களில் 'கான் சிட்டி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. தமிழில் வெளியான 'கைதி' மற்றும் 'அந்தகாரம்' படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் அர்ஜுன் தாஸ்.

இவர் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் தான் 'கான் சிட்டி'. நேற்று முன் தினம் (ஜூன் 26-ஆம் தேதி) இப்படம் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.

க்ரைம் காமெடி ஜானர் படமான இதை ஹரிஷ் துரைராஜ் என்கிற அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். இதில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து அன்னா பென், யோகி பாபு, VTV கணேஷ், வடிவுக்கரசி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இந்த படம் கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.2.06 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

From Around the web