Con City Box Office : 3 நாட்களில் அர்ஜுன் தாஸின் 'கான் சிட்டி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Jun 29, 2026, 10:04 IST
3 நாட்களில் 'கான் சிட்டி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. அர்ஜுன் தாஸ் நடித்துள்ள புதிய க்ரைம் காமெடி ஜானர் படம் 'கான் சிட்டி'. கடந்த ஜூன் 26-ஆம் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளி வந்தது.
இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குநர் கார்த்திக் நரேனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.
'கான் சிட்டி'-யில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக 'கொட்டுக்காளி' புகழ் அன்னா பென் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் யோகி பாபு, வடிவுக்கரசி, VTV கணேஷ், அகிலன், சாக்ஷி வைத்யா, நந்தகோபால், தீபா ராமானுஜம், ராதாரவி, ஷாஜி சென், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் டார்கெட் ஆடியன்ஸிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது. தற்போது, இந்த படம் கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ.3.77 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
