Con City Box Office : 4 நாட்களில் அர்ஜுன் தாஸின் 'கான் சிட்டி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Jun 30, 2026, 12:08 IST
4 நாட்களில் 'கான் சிட்டி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் எப்போதாவது இந்த க்ரைமையும், காமெடியையும் கலந்து ரெடி பண்ண படம் வெளியாகி ரசிகர்களை லைக்ஸ் போட வைக்கும்.
அந்த வேலையை செய்ய கடந்த ஜூன் 26-ஆம் தேதி வெளியான படம் தான் 'கான் சிட்டி'. இதில் கதையின் நாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் முக்கிய ரோல்களில் அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, VTV கணேஷ், ராதாரவி, பரத்வாஜ் ரங்கன், மதன் தக்ஷிணாமூர்த்தி, பொன்வண்ணன் நடித்துள்ளார்கள்.
இப்படம் ரசிகர்களின் வரவேற்போடு பாக்ஸ் ஆபிஸில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. அதன்படி கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.4.29 கோடி வசூல் செய்துள்ளதாம்.
