Con City Box Office : 5 நாட்களில் அர்ஜுன் தாஸின் 'கான் சிட்டி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Con city 5 days collection

5 நாட்களில் 'கான் சிட்டி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. அர்ஜுன் தாஸ் நடிப்பில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி வெளி வந்த டார்க் காமெடி படம் தான் 'கான் சிட்டி'.

'துருவங்கள் 16' புகழ் இயக்குநர் கார்த்திக் நரேனின் உதவி இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் தான் இப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.

இதில் ஹீரோயினாக அன்னா பென்னும், வில்லனாக நந்தகோபாலும் நடித்துள்ளனர். மேலும், முக்கிய வேடங்களில் யோகி பாபு, VTV கணேஷ், வடிவுக்கரசி, மாஸ்டர் அகிலன் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் முதல் பாதி பாஸ் ஆகி விட்டாலும், இரண்டாம் பாதியை சற்று இழுத்து விட்டார்கள். இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.4.68 கோடி வசூல் செய்திருக்கிறது.

From Around the web