Con City Box Office : அர்ஜுன் தாஸின் 'கான் சிட்டி' படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Con city day 1 collection

'கான் சிட்டி' படத்தின் முதல் நாள் வசூல் தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் என்ட்ரி ஆன போது தொடர்ந்து நெகட்டிவ் ரோலில் நடித்து வந்தவர் அர்ஜுன் தாஸ்.

அதன் பிறகு ஹீரோ ரூட்டில் பயணிக்க துவங்கிவிட்டார். இவர் நடித்துள்ள புது படம் 'கான் சிட்டி'. இப்படம் நேற்று (ஜூன் 26-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது.

புதுமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அன்னா பென் நடித்திருக்கிறார்.

மேலும், VTV கணேஷ், யோகி பாபு வடிவுக்கரசி, ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரைம் காமெடி ஜானர் படமான இதன் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.86 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web