சாகுற வரைக்கும் பணம் வேணுமா? அதுக்கொரு ஐடியா இருக்கு... வெளியானது அர்ஜுன் தாஸின் 'கான் சிட்டி' ட்ரெய்லர்!
Jun 20, 2026, 17:23 IST
'கைதி' புகழ் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் தான் 'கான் சிட்டி'. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார்.
இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அன்னா பென் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் யோகி பாபு, வடிவுக்கரசி, VTV கணேஷ், ராதாரவி, அருள்தாஸ், தம்பி இராமையா, பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், இதன் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியானது.
தற்போது, படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை வருகிற ஜூன் 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
