சூப்பர் ஹிட்டான 'Con City'... இயக்குநருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த அர்ஜுன் தாஸ்!

 
Arjun das con city harish durairaj

ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்று தான் அந்த படத்தின் இயக்குநர், நடிகர் மற்றும் அப்படக்குழுவினர் அனைவரும் நினைத்து தங்களது முழு உழைப்பையும் போடுவார்கள். 

அந்த படத்தை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகி விட்டால், நிச்சயம் அப்படம் வெற்றி பெற்று விடும். இது ஒரு சின்ன பட்ஜெட் படங்களுக்கு நடந்தால், எப்படி இருக்கும்.

அப்படி ஒரு சம்பவம் தான் 'கான் சிட்டி' படத்துக்கு நடந்திருக்கிறது. :கைதி' புகழ் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்து கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி வெளியான இந்த படத்தை இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியிருந்தார்.

இது தான் இவருக்கு முதல் படமாம். டார்க் காமெடி படமான இதில் முக்கிய கதாபாத்திரங்களில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு, அகிலன் நடித்திருந்தனர்.

ரசிகர்களின் வரவேற்பால் இப்படம் கடந்த ஒரு வாரத்தில் உலக அளவில் ரூ.6.51 கோடி வசூல் செய்திருக்கிறது. தற்போது, நடிகர் அர்ஜுன் தாஸ் இயக்குநர் ஹரிஷ் துரைராஜுக்கு தங்க செயினை சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக கொடுத்துள்ளார்.

From Around the web