ஃபேமிலியோடு ஜாலியா சிரிச்சு பார்க்கலாம்!.. ’கான் சிட்டி’க்கு அர்ஜுன் தாஸ் கியாரண்டி!..

 
con

தனித்துவமான குரல், வித்தியாசமான திரைக்கதைகள் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது புதிய படமான 'கான் சிட்டி' மூலம் ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறார். படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பகிர்ந்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

அப்போது பேசிய அர்ஜுன் தாஸ், தனது திரைப்பயணத்தில் ஊடகங்களின் விமர்சனங்களும் கருத்துகளும் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்தார். "ஒவ்வொரு படத்திற்குப் பிறகும் பல பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட முறையில் வந்து தங்களது கருத்துகளை பகிர்வார்கள். ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை உங்கள் விமர்சனங்கள் மூலமாகவே புரிந்துகொண்டேன்" என்றார்.

தொடர்ந்து 'கான் சிட்டி' குறித்து பேசிய அவர், இது முழுக்க முழுக்க குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படம் என குறிப்பிட்டார். "கதை குறித்து அதிகம் சொல்ல விரும்பவில்லை. குடும்ப ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் உருவாகியுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்தப் படத்தில் தான் ஏற்றுள்ள கதாபாத்திரம் மிகவும் இயல்பானது என்றும், நம்மைச் சுற்றி வாழும் சாதாரண இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவும் கூறினார். அதனால் இந்த வேடம் எனக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது" என்றார்.

அர்ஜுன் தாஸ், வில்லன் வேடங்களைத் தாண்டி குடும்பம், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களிலும் ரசிகர்கள் தன்னை ஏற்றுக்கொள்வது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே, சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய தனது திருமண வதந்திகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார். "அந்த செய்தி எப்படி பரவியது என்று எனக்கே தெரியவில்லை. வீட்டிலிருந்தே பலர் அதைப் பற்றி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் தற்போது நிச்சயதார்த்தமோ, திருமணத் திட்டமோ எதுவும் இல்லை" என்று சிரித்தபடி விளக்கம் அளித்தார்.

Tags

From Around the web