தனது கேங்குடன் கெத்தாக நிற்கும் 'Super Hero' அர்ஜுன் தாஸ்... வெளியானது 3-வது லுக்!

 
Super hero 3rd look

'கான் சிட்டி' படத்துக்கு பிறகு அர்ஜுன் தாஸ் நடித்து வரும் படத்தின் பெயர் 'சூப்பர் ஹீரோ'. இதை புதுமுக இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் இயக்குகிறார்.

இவர் ஜெய்யின் 'பலூன்' படத்தில் இயக்குநர் சினிஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். 'சூப்பர் ஹீரோ' படத்தில் ஹீரோயினாக தேஜு அஸ்வினியும், வில்லனாக சாண்டியும் நடிக்கிறார்கள்.

சமீபத்தில், அர்ஜுன் தாஸ் குழந்தைகளுடன் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக், வில்லன் சாண்டியுடன் இருக்கும் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் ஹீரோவின் கேங் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். இதற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார், சத்யா.வி ஒளிப்பதிவு செய்கிறார்.

From Around the web