குழந்தைகளை கவரும் வகையில் வெளியானது அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'சூப்பர் ஹீரோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

 
Arjun das super hero first look

அர்ஜுன் தாஸ் நடித்த 'கான் சிட்டி' படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் 'சூப்பர் ஹீரோ'.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் இயக்கி வருகிறார். இதில் அர்ஜுன் தாஸுக்கு எதிராக மோதும் வில்லன் ரோலில் சாண்டி நடிக்கிறார்.

இதை 'Soldiers Factory - Redacted ஸ்டுடியோஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இதற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து வருகிறார்.

தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். செகண்ட் லுக்கை வருகிற ஜூலை 8-ஆம் தேதியும், 3-வது லுக்கை ஜூலை 10-ஆம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

 

Tags

From Around the web