அர்ஜுன் தாஸ் Vs சாண்டி... வெளியானது 'சூப்பர் ஹீரோ' படத்தின் மிரட்டலான செகண்ட் லுக்!

 
Super hero 2nd look

'கைதி' புகழ் அர்ஜுன் தாஸ் நடித்த 'கான் சிட்டி' என்ற படம் சமீபத்தில் தான் வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையடுத்து அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்து வரும் படம் தான் 'சூப்பர் ஹீரோ'. இந்த படத்தை 'பலூன்' பட இயக்குநர் சினிஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்ற விக்னேஷ் வேணுகோபால் என்பவர் இயக்குகிறார்.

இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக தேஜு அஸ்வினி நடிக்கிறார். மேலும், மிரட்டலான வில்லன் வேடத்தில் சாண்டி நடிக்கிறாராம். இதை இயக்குநர் சினிஷின் 'Soldiers Factory' நிறுவனத்துடன் சேர்ந்து 'Redacted ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.

நேற்று முன் தினம் தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். தற்போது, செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதன் 3-வது லுக் போஸ்டர் வருகிற ஜூலை 10-ஆம் தேதி வெளியாகுமாம்.

From Around the web