19 வருடங்களுக்கு பிறகு வெற்றியை ருசிக்கும் அர்ஜூன்..அதுவும் பிளாக்பஸ்டர்
தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோக்களில் அதாவது சண்டைகாட்சிகளில் ரிஸ்க் எடுப்பது விஜயகாந்துக்கு அடுத்து அர்ஜூன் மட்டுமே. அர்ஜூன் படங்கள் என்றாலே தேசபக்தி அதிகம் இருக்கும். ஜெண்டில்மேன், ஜெய்ஹிந்த், முதல்வன், சாது,ஏழுமலை, கிரி என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர் தோல்வி அடையவே வில்லனாக நடிக்க துவங்கினார். அஜித்துடன் மங்காத்தா, விஷாலுடன் இரும்பு திரை என வில்லன் வேடங்களிலும் அசத்தினார்.
இந்த நிலையில் அர்ஜூன் நடித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான படம் பிளாஸ்ட். அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை
புதிய இயக்குனரான சுபாஷ் கே.ராஜ் இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வெளியான முதல் நாள் 1 கோடி வரை வசூல் செய்தது. குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளே இப்படத்தை வெளியிட்டனர். ஆனால் படம் பற்றிய பாசிடிவ் விமர்சனங்கள் வர துவங்கவும் வசூலும் அதிகரித்துள்ளது. இரண்டாவது நாளில் வசூலும் முன்று மடங்கானது. திரையரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பல திரையரங்குகளில் ஆன்லைன் புக்கிங் அதிகரித்துக் கொண்டே வருகிறதாம்.

தொடர் தோல்விகளில் துவண்டுகொண்டிருண்டஹ் அர்ஜூனுக்கு இப்படம் மீண்டும் ஹீரோவாக மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கு பின் அவரது படம் வெற்றி பெற்றிருக்கிறது. இறுதியாக அர்ஜூன் ந்டிப்பில் 2007ம் ஆண்டு வெளியான மருதமலை படம் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
