டோலிவுட்டில் புதிய அவதாரம் எடுக்கும் `ஆக்ஷன் கிங்’ அர்ஜூன்!

தெலுங்கு ரசிகர்களா `மாஸ் மகாராஜா’ என்று கொண்டாடப்படும் ரவி தேஜாவின் `கிராக்’ படம் கடந்த 9ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. கொரோனாவுக்குப் பின்னர் டோலிவுட்டில் மாஸ் ஹிட்டடித்த கிராக் படத்தைத் தொடர்ந்து ரவி தேஜா, உடனடியாக அடுத்த புராஜக்டைத் தொடங்கிவிட்டார். கில்லாடி என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தை ரமேஷ் வர்மா இயக்குகிறார்.
ஹைதராபாத்தில் கடந்த இரண்டு வாரங்களாக இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. `டாக்டர்’ ஹீரோயின் பிரியங்கா மோகன் நடிக்கும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜூன் இணைந்திருக்கிறார். படத்தில் அவர் என்ன ரோலில் நடிக்கிறார் என்பது குறித்து படக்குழு வாய்திறக்காத நிலையில், திரையில் ரவி தேஜாவுக்கு டஃப் பைட் கொடுக்கும் மெயின் வில்லனே ஆக்ஷன்கிங் அர்ஜூன்தான் என்கிறார்கள். கில்லாடி செட்டில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் அர்ஜூன் இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்.