×

காதலிக்காக 20 கோடியில் பங்களா வாங்கிய வலிமை பட தயாரிப்பாளர் மகன்...

நடிகர் அர்ஜுன் கபூர் தனது காதலியின் வீட்டருகே, புதிதாக சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளாராம்.
 
976379-malaika-arjun

பிரபல வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூர், தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

அர்ஜுன் கபூர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவர், தன்னை விட 12 வயது பெரியவரான, பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார்.

நடிகை மலைக்கா அரோராவிற்கு, ஏற்கனவே அர்பாஸ் கான் என்பவருடன் திருமணமாகி, விவாகரத்தும் ஆகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் கபூர் தனது காதலியின் வீட்டருகே, புதிதாக சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளாராம்.

ஆம் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் அமைத்திருக்கும் இந்த சொகுசு வீட்டின் விலை ரூ.20 கோடி என்று தெரிவிக்கின்றனர்.  

From around the web

Trending Videos

Tamilnadu News