×

ஸ்ரீதேவியை காதலித்தது தவறு... என் அம்மாவுக்கு துரோகம்... போனி கபூரின் மகன்

தன் அப்பா போனி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை காதலித்தது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர். 

 
902470-sridevi-boneykapoor-janhvikapoor-khushikapoor

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் மோனா ஷௌரி என்பவரை திருமணம் செய்து அவர்களுக்கு அர்ஜுன் என்கிற மகனும், அன்ஷுலா என்கிற மகனும் பிறந்தார்கள். இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான போனி கபூர் நடிகை ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

தன் அம்மாவின் வாழ்க்கையை ஸ்ரீதேவி கெடுத்துவிட்டதாக அவர் மீது கடும் கோபத்தில் இருந்தார் அர்ஜுன் கபூர். அவரின் கோபத்தை நினைத்து ஸ்ரீதேவி கடைசி வரை பயத்தில் இருந்தார். ஸ்ரீதேவி இறந்த பிறகு அர்ஜுன் கபூர் தன் கோபத்தை விட்டுவிட்டார். 

ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி மற்றும் குஷியை தன் சொந்த தங்கைகள் போன்று பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் போனி கபூர், ஸ்ரீதேவி இடையேயான உறவு குறித்து அர்ஜுன் கபூர் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அர்ஜுன் கபூர் கூறியதாவது, ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு உருவான சிக்கலான சூழலை எதிர்கொள்ள என் அம்மாவின் வளர்ப்பு தான் உதவியது என்றார்.

என் தந்தை செய்ததை நான் ஏற்க மாட்டேன். ஏனென்றால் அவர் காதலால் ஏற்பட்ட விளைவுகளை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் அது எனக்கு புரிகிறது ஆனால் இரண்டு குழந்தைகள் என ஆன பிறகு இன்னொரு பெண்ணை கதலித்து திருமணம் செய்து என் அம்மாவிற்கு துரோகம் செய்ததை நான் ஏற்கமாட்டேன். 

அர்ஜுன் தற்போது பிரபல பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவை காதலித்து வருகிறார். விவாகரத்தான மலாய்காவுக்கு அர்ஹான் கான் என்கிற 18 வயது மகன் இருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News