Categories: Cinema News latest news

5 கோடி ரூபாய் நஷ்டஈடு வேண்டும்: பாலியல் புகார் கூறிய நடிகை மீது அர்ஜூன் முறையீடு

தமிழில் நிபுணர் மற்றும் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை, மீடூ புகார் 2018 ஆம் ஆண்டு ஆக்சன் கிங் அர்ஜுன் மேல் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஆக்சன் கிங் அர்ஜுன் மேல் தொடுத்த பிறகு‌ அவர் கூறியபோது, இதுவரை நான் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன், அதில் குறிப்பாக இதில் பாதி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளேன், அதில் என் கூட 70க்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். இதில் என்னுடைய இத்தனை வருஷம் அனுபவத்தில் என்கூட பணிபுரிந்த ஹீரோயின்கள் ஒருத்தர் கூட என் மேல குறை கூறவில்லை.

இதில் ஸ்ருதி மட்டும் என்மேல் தவறாக புகார் கூறி என்னை மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார். இவர் குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மேலும் அர்ஜுன் ஸ்ருதி தனக்கு மான நஷ்டமாக 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று முறையிட்டு இருந்தார்.

இந்த வழக்கு குறித்து கர்நாடக மாவட்டம் அமர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது

sruthi jariharan-Arjun

இந்த நிலையில் இந்த புகார் குறித்து அர்ஜுனை தண்டிக்க வேண்டுமென்றும் அமர் நீதிமன்றத்தில் பெங்களூர் காவல்துறையினர் விசாரணை எடுத்து நடத்தினர். இந்த நிலையில் காவல் துறையினர் மூன்று ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் அர்ஜுன் மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யச் சொல்லி நீதிமன்றத்தின் உத்தரவின் பின் அர்ஜுன் மேல் தவறு என்பதற்கு போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தெரிய வருகிறது.

அமர் நீதி மன்றத்தில் பெங்களூர் போலீசாரிடம் இருந்து அர்ஜுன் மேல் குற்றம் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதால், இந்த வழக்கிலிருந்து அர்ஜுனை விடிவிப்பதாக நீதிமன்றத்திலிருந்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தார்கள்

ராம் சுதன்
Published by
ராம் சுதன்