தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக கலக்கியவர் நடிகர் அர்ஜூன். இவருடைய அசுரத்தனமான சண்டை காட்சிகளால் திரையரங்கமே கதி கலங்கி நிற்கும். அந்த அளவுக்கு ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர். மேலும் இவர் கராத்தல நன்கு பரீட்சையமானவரும் கூட.
இவரின் கெரியரில் முக்கியமான படமாக தாயின்மணிக் கொடி, ஜெய்ஹிந்த், செங்கோட்டை, முதல்வன் போன்ற படங்களை கூறலாம். மேலும் இவர் நடித்த படங்களில் பெரும்பாலும் போலீஸ் அதிகாரியாகவே நடித்திருப்பார். உண்மையில் ஒரு போலீஸ் போலவே தோற்றமளிப்பார்.
இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் “எனக்கு புக் , பென்சில் எல்லாம் திருடுவது மிகவும் பிடிக்கும்” என்று கூறினார். ஒரு நாள் நானும் என் நண்பனும் ஒரு முடிவு எடுத்தோம். நாளையில் இருந்து நம் குறிக்கோள் திருடுவது மட்டும் என்று கூறினார். இது சத்தியமா நடந்தது. ஆனால் சொன்ன மறு நாளே கன்னடத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. கன்னட சினிமாவில் இருந்து அந்த பட வாய்ப்பு வரவில்லையெனில் கண்டிப்பா திருடன் ஆயிருப்பேன் என்று கூறினார்.
16 வயதில் வாய்ப்பு வந்தது. அதன் பின் அந்த எண்ணத்தை எல்லாம் விட்டுவிட்டேன் என்று கூறினார். பெரும்பாலும் போலீஸாகவே நடித்த அர்ஜூன் திருடுவதை தொழிலாக பண்ணலாம் என எண்ணியதை நினைத்து தொகுப்பாளினி விழுந்து விழுந்து சிரித்தார்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…