துரந்தர் இயக்குனர் படத்தில் அர்ஜுன்? நாட்டு பற்று நச்சன்னு இருக்கும்

 
arjun

துரந்தர் திரைப்படம்: 

இந்திய சினிமாக்களில் நாட்டுப்பற்று குறித்தும் நாடு, தேசம் , சுதந்திரம் உள்ளிட்டவை குறித்தும் திரைப்படங்கள் வெளியானால் அது மிகப்பெரிய அளவில் பேசப்படும். குறிப்பாக மாபெரும் வெற்றி பெறும் திரைப்படமாகவும் அமையும்.

dhurandhar director

அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் வெளியாகி பான் இந்தியா திரைப்படமாக கொண்டாடப்பட்ட திரைப்படம் தான் துரந்தர். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் , இரண்டாம் பாகம் இரண்டு பாகங்களாக வந்து வெற்றி நடை போட்டதோடு வசூலில் மிகப்பெரிய சாதனையும் படைத்தது .

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி துரந்தர் முதல் பாகமும், இந்த வருடம் மார்ச் 19ஆம் தேதியில் இரண்டாம் பாகமும் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டது. இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால்,

அர்ஜுனின் ஆசை: 

தமிழ் சினிமாவில் நாட்டுப்பற்று குறித்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்த நடிகர் தான் அர்ஜுன். குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த முதல்வன் திரைப்படம் இன்று வரை மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது.

arjun

சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய நடிகர் அர்ஜுன் எனக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு இயக்குனரோட திரைப்படத்தில் நடிக்கணும் அப்படின்னு ஒரு ஆசை மிகப்பெரிய ஆசை வந்திருக்கு. அது யார் அப்படின்னு கேட்டீங்கன்னா துரந்தர் திரைப்படத்தோட இயக்குனர் தான்.

அவரோட இயக்கத்தில் ஒரு படத்துல நடிக்கணும். துரந்தர் திரைப்படம் எனக்கான படம் போல இருந்துச்சு. நாட்டுப்பற்று அதிகம் அந்த திரைப்படத்தில் பேசப்பட்டிருந்துச்சு. அதனால இது மாதிரியான ஒரு நல்ல படத்துல மீண்டும் நடிக்கணும் அப்படிங்கறது ஒரு பெரிய ஆசையா இருக்கு. இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங், மாதவன் உள்ளிட்டோர் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர் என்று நடிகர் அர்ஜுன் அந்த பேட்டியில் தெரிவித்தார். 

Tags

From Around the web