×

அர்னாப் கோஸ்வாமி போலீசாரால் தாக்கப்பட்டு அதிரடி கைது - நடந்தது என்ன?

ரிபப்ளிக் தொலைகாட்சி எடிட்டர் அர்னாப் மும்பையில் கைது

 

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி வீட்டில் அதிரடியாக நுழைந்த மும்பை போலீசார் அவரை விசாரணைக்கு அடித்து அழைத்துச் சென்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு அன்வாய் நாயக் என்னும் ஆர்கிடெக்ட் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டனர். அன்வாய் தற்க்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னர் தனது மரணத்துக்குக் காரணம் ரிபப்ளிக் டிவியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி என எழுதிவைத்துவிட்டு தற்க்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மும்பை போலீசார் அர்னாபை இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யும் முன்னர் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News