×

அரஸ்ட் மீ டூ.. சர்ச்சையை கிளப்பிய ஓவியா... ஆர்மி என்ன செய்ய காத்திருக்கோ!!!

விமல் நடித்த களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஓவியாவிற்கு, அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனது.
 
அரஸ்ட் மீ டூ.. சர்ச்சையை கிளப்பிய ஓவியா... ஆர்மி என்ன செய்ய காத்திருக்கோ!!!

விமல் நடித்த களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஓவியாவிற்கு, அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனது. கவர்ச்சிக்கு மாறியும் பட வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இதனால் பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக்பாசிலும் தற்கொலை முயற்சி செய்து பரபரப்பை கிளப்பினார். இதனால் நிகழ்ச்சியின் டிஆர்பி மட்டுமல்ல, ஓவியாவின் புகழும் உச்சிக்கு செ்ன்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஒவியா ஆர்மி துவங்கும் அளவிற்கு ரசிகர் கூட்டம் பெருகியது.

அதற்கு பிறகும் அவர் நடித்த படங்கள் சர்ச்சையில் தான் முடிந்தன. படங்கள் மட்டுமல்ல அடிக்கடி சமூக வலைதளங்களில் ஏதாவது கருத்து பதிவிட்டு, சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். கோலிவுட்டின் கங்கனா என வர்ணிக்கும் அளவிற்கு சர்ச்சையாகி விட்டார் ஓவியா.

பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போது கோ பேக் மோடி ஹாஷ்டேக் உருவாக்கி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். இதனால் பாஜக.,வினர் ஓவியா மீது போலீசில் புகார், கோர்ட்டில் வழக்கு என போடும் அளவிற்கு போயினர். அந்த விவகாரம் முடிவதற்குள் மற்றொரு ட்வீட் மூலம் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.ஓவியா தனது லேட்டஸ்ட் ட்வீட்டில், இது டெமாகிரசியா அல்லது டெமோகிரேசியா என கேட்டதுடன் அரஸ்ட் மீ டூ என்ற ஹாஷ்டாக்கையும் இணைத்துள்ளார். 

இந்த அரஸ்ட் மீ டூ என்ற ஹாஷ்டாக், பிரதமர் மோடிக்கு எதிராக உருவாக்கப்பட்டதாகும். இதில் பிரதமரை கடுமையாக விமர்சித்தும், கேள்விகள் கேட்டும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹாஷ்டாக்கின் கீழ் தான் ஓவியாவும் ட்வீட் செய்துள்ளார்.

ஓவியாவின் இந்த பதிவு சர்ச்சை, பரபரப்பை கிளப்பியதுடன் வைரலாகவும் ஆகிய வருகிறது. இதுவரை 8700 க்கும் அதிகமானவர் இதை லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் ரீட்வீட் வேறு செய்து வருகிறார்கள். கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.


 

From around the web

Trending Videos

Tamilnadu News