Arulvaan Box Office : 2 நாட்களில் அருள்நிதியின் 'அருள்வான்' செய்த வசூல் இவ்ளோ தானா?
Jul 19, 2026, 07:07 IST
2 நாட்களில் 'அருள்வான்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. மாஸ் கமர்ஷியல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை டிக் அடித்து நடித்து வருபவர் தான் நடிகர் அருள்நிதி.
அப்படி இவர் டிக் அடித்து நடித்து முடித்த 'அருள்வான்' என்கிற படம் நேற்று முன்தினம் (ஜூலை 17-ஆம் தேதி) தியேட்டர்களில் வெளியானது. இதை பிரபல இயக்குநர் கணேஷ் விநாயகன் தான் இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தில் பேபி கிருத்திகா, ரம்யா பாண்டியன், ஆரவ் கதையின் முக்கிய ரோல்களில் வலம் வந்திருக்கிறார்கள். இதனை '90 பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்த படத்தை பார்த்த ரசிகர்களிடம் பாராட்டை குவித்து வருகிறது. ஆனாலும், இப்படம் கடந்த இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ.65 லட்சம் மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
