Arulvaan Box Office : 3 நாட்களில் அருள்நிதியின் 'அருள்வான்' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
3 நாட்களில் 'அருள்வான்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. பிரபல நடிகர்களான அருள்நிதியும், 'பிக் பாஸ்' ஆரவ்வும் இணைந்து நடித்துள்ள படம் தான் 'அருள்வான்'.
இப்படம் திரையரங்குகளில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் 'பிக் பாஸ்' ரம்யா பாண்டியன், காளி வெங்கட், அருள்தாஸ், ஜான் விஜய், சரவணன், VTV கணேஷ், பேபி கிருத்திகா, ஹரிஷ் உத்தமன் நடித்துள்ளனர்.
இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார், சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், லாரன்ஸ் கிஷோர் எடிட்டராக வொர்க் பண்ணியிருக்கிறார்.
இந்த படத்தின் கதைக்களத்திற்காக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். ஆனாலும், பாக்ஸ் ஆபிஸில் படிப்படியாக தான் முன்னேறி வருகிறது. அதன்படி கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ.95 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
