Arulvaan Box Office : 5 நாட்களில் அருள்நிதியின் 'அருள்வான்' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Arulvaan

5 நாட்களில் 'அருள்வான்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. 2013-ஆம் ஆண்டு அருள்நிதி நடித்து வெளிவந்த படம் 'தகராறு'. இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் கணேஷ் விநாயகன்.

இதையடுத்து 'வீரசிவாஜி, தேன்' ஆகிய படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் தான் 'அருள்வான்'.

இதில் கணேஷ் விநாயகனின் முதல் பட ஹீரோ அருள்நிதியே நடித்துள்ளார். மேலும், ரம்யா பாண்டியன், ஆரவ், கிருத்திகா, வினோதினி வைத்தியநாதன், காளி வெங்கட், ஹரிஷ் உத்தமன், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் வலம் வந்துள்ளனர்.

இந்த படம் முதல் நாள் ரூ.44 லட்சம் மட்டுமே வசூல் செய்திருந்தது. தற்போது, கொஞ்சம் முன்னேறி கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.1.37 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.

From Around the web