Arulvaan Box Office : அருள்நிதியின் 'அருள்வான்' முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?
Jul 18, 2026, 07:13 IST
'அருள்வான்' முதல் நாள் வசூல் தெரியவந்துள்ளது. பிரபல நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் தான் 'அருள்வான்'.
இப்படம் நேற்று (ஜூலை 17-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை விமர்சன ரீதியாக பாராட்டை குவித்த 'தேன்' பட இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ளார்.
இதில் முக்கிய வேடங்களில் 'பிக் பாஸ்' ஆரவ் - ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, காளி வெங்கட், ஜான் விஜய், VTV கணேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இசையமைத்திருக்கிறார்.
இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இதன் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.44 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
