ஹாரர் படமான 'டிமான்ட்டி காலனி 3'-யின் ரிலீஸ் தேதியை மாற்றிய அருள்நிதி!

 
Demonte colony 3

தியேட்டர்களில் நம்ம என்னதான் காமெடி படங்கள், பக்கா மாஸ் கமர்ஷியல் படங்கள் எல்லாம் ரசிச்சாலும், அவ்வப்போது ஒரு ஹாரர் படத்தையும் பார்த்து பயப்பட ஆசைப்படுகிறோம்.

நம்மை பயமுறுத்த தயாராகி விட்டது 'டிமான்ட்டி காலனி 3' திரைப்படம். அருள்நிதி ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கிறார்.

'டிமான்ட்டி காலனி 1 & 2'-வை விட இந்த பார்ட் 3-யில் திகில் காட்சிகள் கூடுதலாக இருக்கப்போகிறதாம். இதில் நெகட்டிவ் ரோலில் குரு சோமசுந்தரம் நடித்திருக்கிறார்.

சமீபத்தில், படத்தை வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்தனர். தற்போது, செப்டம்பர் 10-ஆம் தேதியே படம் வெளியாகப்போகிறது என்றும், இதற்கு சென்சார் குழுவினர் 'A' சான்றிதழ் அளித்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

From Around the web