ஹாரர் ஜானரில் ரசிகர்களை பயமுறுத்த 'டிமான்ட்டி காலனி 3' ரிலீஸுக்கு நாள் குறித்த அருள்நிதி!
தமிழ் சினிமாவில் அருள்நிதி படங்களுக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர் அதிகமாக த்ரில்லர் ஜானர் படங்களை டிக் அடித்து நடிப்பார்.
த்ரில் பத்தல பாஸ் என்று கேட்பவர்களுக்கு ஸ்பெஷல் ஐட்டமாக ஹாரர் ஜானரில் இவர் பண்ண படங்கள் தான் 'டிமான்ட்டி காலனி 1 & 2'. அஜய் ஞானமுத்து இயக்கிய இவ்விரண்டு படங்களுமே ரசிகர்களிடம் அதிக பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று பெரிய வெற்றி பெற்றது.
இவர்களது காம்போவில் இப்போது மூன்றாவது பாகமும் ரெடியாகி விட்டது. இதில் அருள்நிதியுடன் இணைந்து குரு சோமசுந்தரம், ப்ரியா பவானி ஷங்கர், ஜி.எம்.குமார், மீனாக்ஷி கோவிந்தராஜன், முத்துக்குமார், ஸ்ரீகுமார், அர்ச்சனா ரவிச்சந்திரன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இதற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படத்தை வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
Just the thought of this place will give you Shivers, thrills and nightmares 🥶💀
— Ajay R Gnanamuthu (@AjayGnanamuthu) June 22, 2026
Brace yourself for the Darkness!!! The doors of #DemonteColony3 is about to open!!
Releasing worldwide on September 11 🔥@arulnithitamil @AjayGnanamuthu @priya_Bshankar @Sudhans2017… pic.twitter.com/MNKmI5uACZ
