DC இயக்குநருக்கு சம்பளத்தை அள்ளிக் கொடுத்த சன் பிக்சர்ஸ்!
Aug 10, 2026, 16:52 IST
திரையரங்குகளில் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'டிசி'. இந்த படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.
இவர் தனது முதல் படமான 'ராக்கி'-யிலிருந்து தொடர்ச்சியாக எடுத்த 'சாணிக் காயிதம், கேப்டன் மில்லர்' என ரத்தம் தெறிக்க ஆக்ஷன் படங்களை எடுத்து வருகிறார்.
'டிசி'-யிலும் அதே பாணியை தான் கடை பிடித்திருக்கிறார் அருண். இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார்.
'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. தற்போது, இப்படத்தை இயக்குவதற்காக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ரூ.7 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.