Categories: Cinema News latest news

ஜட்டியாவது போட்டிருக்காரா?.. அருண் விஜய்யின் அடுத்த பட டைட்டில் வெளியானது!.. எப்பவுமே தல ஃபேன் தான்!

அருண் விஜய், பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் புதிய படம் உருவாகி வரும் நிலையில் அந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் விஜயின் 36-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக மிஷன் சேப்டர் 1 படம் பொங்கலுக்கு வெளியானது. அந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு அந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு பொங்கலுக்கும் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் இன்னமும் எப்போது ரிலீஸ் என்பதை படக்குழு அறிவிக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

இதையும் படிங்க: புஷ்பா 2 படத்துல இருந்து செம அப்டேட்!.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ தெரியுமா? சமந்தா பிட்டு வருமா பாஸ்!

மேலும், மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த அக்னிச் சிறகுகள் திரைப்படம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் கிடப்பில் உள்ளது. அருண் விஜய் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடித்த பார்டர் திரைப்படம் பாதியிலேயே நின்று போய்விட்டதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் இந்த தலைப்பில் உருவாகி வரும் அருண் விஜயின் 36-வது படத்துக்கு ரெட்ட தல என டைட்டில் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: இயக்குனரை பங்கம் பண்ணலாம்னு வந்த நிருபர்… வெச்சு செய்த கார்த்தி… நடந்தது இதுதான்..!

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் பாண்டவர் பூமி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு கம்பேக் படமாக அமைந்தது அஜித்துடன் அவர் இணைந்து நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் தான். அதற்குப் பின் அஜித் ரசிகராகவே வலம் வரும் அருண் விஜய் தற்போது தனது படத்தின் தலைப்பிற்கு ரெட்ட ’தல’ என தல அஜித்தை குறிக்கும் விதமாகவே டைட்டில் வைத்துள்ளார் என அஜித் ரசிகர்கள் அருண் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இரண்டு அருண் விஜய் ஒட்டிக்கொண்டு மாற்றான் போல உள்ளநிலையில் ஆடை ஏதும் அணியாமல் இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

இதையும் படிங்க: என் படத்தை பாக்க மாட்டேனு சொல்லிட்டாரு! ரஜினி பற்றி பகத்பாசில் சொன்ன சீக்ரெட்

Saranya M
Published by
Saranya M