×

அருண் விஜய்க்கு உண்மையிலேயே பெரிய மனசுதான் - போட்டோவ பாருங்க..

 

தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பே ஹீரோவாக அறிமுகானவர் அருண் விஜய். ஆனால், சரியான வாய்ப்புகள் இல்லாமல் கிடைக்கும் படங்களில் நடித்து வந்தார். 

அதன்பின் சில வருடங்களாக நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அவரை தேடி வருகிறது. தடம் திரைப்படம் அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. முன்னணி கதாநாயகன் இடத்திற்கு வர கடுமையாக அவர் போராட்டி வருகிறார்.

இந்நிலையில், இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆனால் மற்ற நடிகர், நடிகையர் போல் இல்லாமல் ஆதரவற்ற, அனாதை குழந்தைகளுடன் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 

இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து ‘அந்த குழந்தைகள் முகத்தில் இருக்கும் புன்னகையும், அவர்களின் வாழ்த்தையுமே என் பிறந்தநாள் பரிசாக விரும்புகிறேன்.  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறுவதோடு, நீங்கள் உண்மையிலேயே எங்களுக்கு ரோல் மாடல் என பதிவிட்டு வருகின்றனர்.

arun vijay

From around the web

Trending Videos

Tamilnadu News