ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை திரைப்படம் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. இந்த ஆண்டு ஏ.எல். விஜய் இயக்கத்தில் எமி ஜாக்சன் உடன் இணைந்து அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் ஒன் பொங்கலுக்கு அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்களுடன் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.
அடுத்ததாக சூர்யா விட்டுச்சென்ற வணங்கான் படத்தில் நான் நடிக்கிறேன் என வான்டட் ஆக சென்ற அருண் விஜய் அந்தப் படத்துக்காக பல நாட்கள் வெயிலில் ஓடித் திரிந்து நடித்து முடித்த நிலையில் அந்த படம் இன்னமும் வெளியாகவில்லை. ரிலீஸ் தேதியை கூட அறிவிக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போகின்றனர்.
இதையும் படிங்க: அந்த விஷயத்தையே கமல் இப்போதான் செய்யகிறாரா?.. அப்போ கல்கி படத்தில் வாம்மா மின்னல் கதைதானா?..
பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் எப்படி வந்துள்ளது என்பதை டிரைலரை பார்த்த ரசிகர்கள் அப்படியே பிதாமகன் படத்தில் சீயான் விக்ரமுக்கு பதிலாக அருண் விஜய் நடித்தது போலவே உள்ளதாக கமெண்ட்டுகள் போட்டனர்.
இந்நிலையில், பாலா படத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் வண்டி ஓடாது என நாட்டாமை விஜயகுமார் போல வண்டிய விடுறா என தற்போது ரெட்ட தல படத்தை ஆரம்பித்து அந்தப் படத்தின் முதல் ஷெட்யூலை முடித்து விட்டதாக தற்போது காரில் கெத்தாக அமர்ந்து கொண்டு மாஸ் போஸ் கொடுத்துள்ளார் அருண் விஜய்.
இதையும் படிங்க: சூரியுடன் எஸ்.கே.வுக்கு இப்படி ஒரு கூட்டா!… சைலண்டா எல்லா வேலையும் பாக்குறாங்க!…
பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படத்தில் அருண் விஜய்யை ரொம்பவே மோசமாக காட்டிய நிலையில் ரெட்ட தலை படத்தில் பேக் டு தி பியூட்டி மோடுக்கு மாறியுள்ளார் அருண் விஜய் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அடுத்தடுத்து அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். இந்தப் படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து பிக் பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. போகிற போக்கை பார்த்தால் வணங்கான் படத்துக்கு முன்னதாக ரெட்ட தல படம் வந்தாலும் வந்து விடும் என்கின்றனர்.
இதையும் படிங்க: அந்த சீனுக்கு மியூசிக் போடாதீங்க..! இளையராஜாவின் கையைப் பிடித்து நிறுத்திய இயக்குனர்… !
Vijay TVK:…
Idli kadai…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…