×

திகில் கிளப்பும் அருண் விஜய் - மிஷ்கின் படத்தின் டைட்டில்....!

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட வித்யாசமான கதைகளை தனக்கே உரிய ஸ்டைலில் படமெடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கும் இயக்குனர் மிஸ்கின். தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷமான இவரது படங்கள் ஒவ்வொன்றும் அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட கதைகள்.

 

துப்பறிவாளன் 2 படத்தை இயக்குவதில் விஷாலுடன் ஏற்பட்ட பிரச்னையால் மனமுடையந்த மிஸ்கின் அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அதையடுத்து தரமான படம் ஒன்றை இயக்கி அனைவரும் வாய் மேல் விரல் வைக்கும் அளவுக்கு சிறப்பான வெற்றியை கொடுக்கவேண்டும் என எண்ணி அடுத்த படத்திற்கான வேலைகள் ஆரம்பித்துள்ளார்.

தனது ஹிட் படங்களுள் ஒன்றான அஞ்சாதே இரண்டாம் பாக கதையை தயார் செய்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான சிம்புவை தேடி சென்ற மிஸ்கின் கதை கூறி ஒப்புகொள்ளவைத்தார். ஆனால் கடைசியில் சிம்பு கேட்ட 10 கோடி சம்பளத்தால் மிரண்டு போன மிஸ்கின் அங்கிருந்து எழுந்து வந்து திறமையைய் வைத்துக்கொண்டு சரியான வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய்யை ஓகே பணியதாக தகவல் வெளியானது .

இந்நிலையில் அருண்விஜய் நடிக்கும் புது படத்திற்கு ‘காவு’ என்ற டைட்டிலை தேர்வு செய்து இருப்பதாகவும் இந்த டைட்டில் குறித்த அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மிஸ்கின் படம் என்றாலே வில்லனுக்கு தனி மவுஸ் என்பது அனைவரும் அறிந்ததே.. அதுபோல் இப்படத்தில் வில்லன் வேடத்தில் ஒரு புதுமுக நடிகர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.  

மேலும் மிஷ்கின்  சிம்புவுக்கு ஒரு கதை சொல்லியுள்ளார். அந்த கதை அவருக்கும் பிடித்துப் போக, ஓராண்டுக்குப் பின்னர் இந்த கூட்டணி படம் இயக்கும் என சொல்லப்பட்டது. இந்த படத்தில் வடிவேலுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

From around the web

Trending Videos

Tamilnadu News