×

ஓடிடி தளத்தில் வெளியாகும் அருண் விஜய் படம்!

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் கடந்த  29-ம் தேதி  அமேசான் பிரைமில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுது. அதையடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பென்குயின் படமும் வருகிற ஜூன் 19-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.  இதைடுத்து தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள  "வா டீல்" படமும்  நேரடியாக ஓடிடிதளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

 

இதுகுறித்து அப்படத்தின் த்யாரிப்ளர் JSK சதிஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "எங்களது JSK  ஃபிலிம் கார்பரேசன் தயாரிப்பில் உருவாகியுள்ள  அண்டாவக் காணோம், வா டீல், மம்மி சேவ் மீ' ஆகிய படங்களை நேரடியாக ஓடிடி-ல் வெளியாகவுள்ளதை மகிழ்ச்சியுடன்  கொள்கிறோம். மேலும், இன்னும் 3 பெரிய படங்களையும் துவங்கவிருக்கிறோம் இதுகுறித்த தகவல் விரைவில் அறிவிப்போம் ... வழக்கம் போல உங்களது ஆதரவு தேவை என கூறி பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் திரையரங்குகள் அனைத்தும் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது. ஆதலால், ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படத்தில் வேலைகள் முழுவதுமாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றாக ஓடிடி ப்ளாட்பாரத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News