அருண்விஜய்க்கும் பாதிப்பா? சொல்லியே நடிக்க வச்ச பாலா.. என்னவா இருக்கும்?
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் வணங்கான். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்திருக்கிறார். மிஷ்கின் சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது.
இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது .ஏனெனில் நீண்ட வருடங்கள் கழித்து பாலாவின் இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் வெளியாக இருப்பதால் இப்போதுள்ள இளைஞர்களுக்கு பாலாவின் படைப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை அறிய ஒரு நல்ல வாய்ப்பாக இந்த படம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. முதலில் இந்த படத்தில் சூர்யா நடிப்பதாகத்தான் இருந்தது.
சில பல காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து விலக அருண் விஜய் இந்த கதைக்குள் நுழைந்தார். கோட்டி என்ற கதாபாத்திரத்தில் அருண் விஜய் வணங்கான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பற்றி தன்னுடைய அனுபவத்தை சமீபத்திய ஒரு பேட்டியில் அருண் விஜய் கூறும் பொழுது முதலில் இந்த கதையை பாலா என்னிடம் சொன்னதும் கோட்டி கதாபாத்திரம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை பற்றி விளக்கினார்.
அது மட்டுமல்ல இந்த படத்திற்குப் பிறகு நான்கு மாதங்கள் அந்த படத்தின் பாதிப்பு உன்னிடம் நிறையவே இருக்கும் என்றும் பாலா சொன்னார். அவர் சொன்னதைப் போல வணங்கான் திரைப்படத்திற்கு பிறகு இரண்டு மாதங்கள் அந்த கதாபாத்திரத்தின் பாதிப்பு என்னுள் இருந்தது. அதில் இருந்து மீண்டு வரவே எனக்கு கொஞ்ச நாள் ஆனது. அதன் பிறகு தான் ரெட்ட தல படத்திற்கு நான் தயாரானேன் என அந்த பேட்டியில் அருண் விஜய் கூறி இருக்கிறார் .
பாலாவின் படங்களை பொறுத்த வரைக்கும் படங்களில் நடித்த ஹீரோ கதாபாத்திரம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வணங்கான் திரைப்படத்திலும் அருண் விஜயின் கதாபாத்திரமும் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.