×

பாடல் தந்த சுவை- தேவனின் கோவில் மூடிய நேரம்

அறுவடை நாள் படத்தில் இடம்பெற்ற தேவனின் கோவில் பாடல் வரிகள்
 
devanin kovil song

எண்பதுகளின் இறுதியில் வெளியான படம்தான் அறுவடை நாள். அவன் இவன் படத்தில் ஹைனஸ் ஆக நடித்த இயக்குனரும் சிந்தனையாளருமான ஜி.எம் குமார் இயக்கிய படமிது. ஜி.எம் குமார் ஏற்கனவே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அந்த வகையில் ஜி.எம் குமாருக்கும் இளையராஜாவின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டின் பலனாக அறுவடை நாள் படத்தின் பாடல்கள் மிக பிரமாதமாக வந்திருந்தன.

அறுவடை நாள்

அதில் முக்கியமாக இந்த படத்தில் இடம்பெற்றிருந்த தேவனின் கோவில் மூடிய நேரம் என்ற பாடல் பலராலும் ரசிக்கப்பட்டது. இந்த பாடலை கேட்பது எப்படியென்றால் தேனில் ஊறிய பலாச்சுளை சாப்பிடுவது போல மிக சுவையானது அப்படி ஒரு இனிய பாடல்தான் இது.

சின்னக்குயில் சித்ரா பாடியிருந்த இந்த பாடலில் ஆரம்பத்திலேயே இளையராஜாவின் மந்திர உச்சரிப்புடன் பிரேமம் பிரேமம் என்று பாடல் ஆரம்பிக்கும் . பாடலின் முதல் சரணத்துக்கு பின் இளையராஜாவின் குரலில் ஹேய் தந்தன தந்தனா தந்தனானா என்ற ஹம்மிங்கோடு வரும் அந்த வரிகள் மிகவும் புத்துணர்ச்சியானவை நம்மை எங்கோ இட்டு செல்லும்.

நானொரு சோக சுமைதாங்கி

துன்பம் தாங்கும் இடிதாங்கி

போன்ற வரிகள் எல்லாம் எல்லோராலும் ஆழ்ந்து உற்று நோக்கப்பட்ட வரிகள் கதாநாயகிக்கு ஏற்படும் மனக்கஷ்டத்தையும் துயரத்தையும் அழகாக பாடலாசிரியர் கங்கை அமரன் இந்த வரிகளில் சொல்லி இருப்பார்.

பிரிந்தே வாழும் நதிக்கரை போலத்
தனித்தே வாழும் நாயகி.
இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி

இப்படி இனிமையான எளிமையான வரிகளை மிக ஆழத்துடன் சொன்ன பாடல் இது பாடல் ஒரு கன்னியாஸ்திரி பாடுவது போல வரும்.கன்னியாஸ்திரி பெண்ணுக்கு வரும் கஷ்டங்களை சொன்ன பாடல்தான் இது. இந்த பாடலில் வரும் வரிகள் எல்லாம் மிகவும் சோகமான கஷ்ட நேரங்களில் பாடக்கூடிய வரிகள் போல இருக்கும். ஆனால் பாடல் ஏதோ சந்தோஷமான பாடல் போலத்தான் வரும். எதையும் தாங்கும் இதயமான கதாநாயகி தன்னுடைய கஷ்டங்களை டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் கதாநாயகி என்பதால் சோகம், சந்தோஷம் இரண்டு கலந்தது போல்தான் இந்த பாடல் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும்.
 

இந்த பாடலை எழுதியவர் கங்கை அமரன். சில படங்களின் பாடல்களின் காட்சி அமைப்புகள் சரியான சூழலில் எடுத்திருக்க மாட்டார்கள் அது போலவே ஆழ்ந்த வரிகளை உடைய இந்த பாடலின் காட்சியமைப்புகளும் சரியாக இல்லாதது படத்தின் பெரிய மைனஸ். சில காரணங்களால் படத்தின் டைட்டிலிலேயே இந்த பாடலை போட்டு முடித்து விடுவார்கள்.

சித்ரா பாடிய மிக அற்புதமான பாடல் வாய்ப்பு இருப்பின் யூ டியுபில் சென்று பார்த்து கேட்டு ரசிக்கலாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News