×

மாதவன் சொன்ன நோ....  தனக்கு சாதகமாக்கிய ஆர்யா... குஷியில் லிங்குசாமி

லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருந்தார் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
 
Arya

ராம் போதினேனியை வைத்து லிங்குசாமி இயக்கி வரும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க ஆர்யாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். 

ஆர்யாவின் பெயரை கேட்டாலே அவரா நல்லா கடலை போடுவார், லவ்வர் பாய் பாஸ் என்பார்கள். இப்படி ஒரே இமேஜுக்குள் முடங்கிவிடக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறார் ஆர்யா. எனக்கு காதல், ஆக்ஷன் மட்டும் இல்லை வில்லத்தனம் செய்யவும் நல்லாவே வரும் என்று ரூட்டை மாற்றிவிட்டார். தன் நெருங்கிய நண்பன் விஷாலுக்கே வில்லனாகிவிட்டார் ஆர்யா.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் எனிமி படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் ஆர்யா. அவர் தன் நண்பனுடன் மோதுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். இந்நிலையில் லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் ஆர்யா. ராம் போதினேனி ஹரீரோவாக நடிக்கும் அந்த படத்தில் உப்பேனா படம் புகழ் க்ரித்தி ஷெட்டி தான் ஹீரோயின்.

லிங்குசாமி படத்தில் மாதவன் அல்லது அருண் விஜய் வில்லனாக நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. நான் லிங்குசாமி படத்தில் நடிக்கவில்லை என்று மாதவன் விளக்கம் அளித்தார். இந்நிலையில் ஆர்யாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். முன்னதாக லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருந்தார் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் நேரத்தில் ஆர்யா இப்படி துணிந்து வில்லனாக நடிப்பது ரிஸ்க் தான் என்றாலும் அவருக்கு பாராட்டுகள் வந்து குவிகிறது. ஹீரோவாக இருந்தாலும் சக ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதியின் இமேஜ் குறைந்து போகவில்லை. அதனால் அடுச்சு தூக்குங்க ஆர்யா என்று ரசிகர்கள் ஊக்கமளித்து வருகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News