Ananthan Kaadu Box Office : 2 நாட்களில் ஆர்யாவின் 'அனந்தன் காடு' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Ananthan kaadu 2 days collection

2 நாட்களில் 'அனந்தன் காடு' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'Mr.X' படத்துக்கு பிறகு ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் தான் 'அனந்தன் காடு'.

தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் நேற்று முன் தினம் (ஜூன் 25-ஆம் தேதி) ரிலீஸ் ஆனது. இந்த படத்தை இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.

இதன் கதை, திரைக்கதையை எழுதியதுடன், முக்கிய ரோலிலும் நடித்திருக்கிறார் முரளி கோபி. மேலும், இந்திரன்ஸ், சித்திக், சுனில், நிகிலா விமல், ரெஜினா நடித்துள்ளார்கள். 

பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. தற்போது, இப்படம் கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.1.87 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

From Around the web