Ananthan Kaadu Box Office : ஆர்யாவின் 'அனந்தன் காடு' படத்தின் முதல் நாள் வசூல் இவ்ளோ தானா?

 
Ananthan kaadu day 1 collection

'அனந்தன் காடு' படத்தின் முதல் நாள் வசூல் தெரியவந்துள்ளது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் மலையாளம் மற்றும் தமிழில் ரெடியாகியுள்ள புது படம் 'அனந்தன் காடு'.

இப்படம் நேற்று (ஜூன் 25 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது. இதில் ஹீரோவாக ஆர்யா நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கிறார்.

ஆர்யாவுடன் இணைந்து முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ், நிகிலா விமல், விஜயராகவன், ரெஜினா, சுனில், அச்யுத் குமார், சித்திக் நடித்திருக்கிறார்கள். 'காந்தாரா' புகழ் அஜனீஷ் லோக்நாத் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது, இதன் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.74 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web