டேய் நீ முதல்ல எழுந்து ஷூட்டிங் வாடா! - விஷாலை எச்சரித்த ஆர்யா...

ஆர்யாவும் விஷாலும் வாடா போடா நண்பர்கள். இவர்கள் இருவரும் இணைந்து எனிமி என்கிற படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தில், ஆர்யா வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 22ம் தேதி துவங்கவுள்ளது.
இந்நிலையில், விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘என் எதிரியே ஆர்யா. இனிமேல் நீ என் நெருங்கிய நண்பன் இல்லை. 22ம் தேதி உன் முகத்தில் என் முதல் குத்துக்காக காத்திரு. உன்னை சிறந்த எதிரியாக மாற்றுவேன்’ என விளையாட்டாக பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஆர்யா ‘டேய். .நீ 22ம் தேதி காலையில எந்திரிச்சு முதல்ல ஷூட்டிங் வாடா’ என பதிவிட்டுள்ளார். இதனிடையே உள்ளே நுழைந்த பிரசன்னா ‘புரோ, விஷால் அறைக்கு சென்று ஒரு மணி நேரம் எழுப்புங்கள்.. அதைத்தான் நான் செய்வேன்.. ’என பதிவிட்டுள்ளார்.
துப்பறிவாளன் படத்தில் விஷாலுடன் பிரசன்னா நடித்தது குறிப்பிடத்தக்கது.
Dai ... u first wake up and come for shoot on 22nd 🤣🤣🤣🤣😂😂😂😅😅😅 https://t.co/ZamGY8dEdZ
— Arya (@arya_offl) December 17, 2020