×

பேருக்கு பின்னால் ஆர்யா...அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சுமா!..அபர்ணந்தி அடாவடி தாங்கலயே!

 

2018ம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தீவிரமாக செயல்பட்டவர் அபர்ணதி. ஆனால், இறுதி சுற்றில் பங்கேற்க முடியாமல் அவர் வெளியேறினார். 

நிகழ்ச்சி முடிந்த பின்னும் ஆர்யாவை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்வேன் எனவும் பேட்டிகளில் கூறி வந்தார். வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். 

abarnathi

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்கு இறுதியில் ஆர்யா என இணைத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இன்னும் ஆர்யாவை மறக்கலயா?.. அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சுமா. அவரை விட்றுமா!’என பதிவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News