Categories: Cinema News latest news

ஆர்யா கண்களில் இருந்து ஓடிய ரத்த ஆறு!… என்ன இருந்தாலும் ஒரு இயக்குனர் இப்படியா துன்பப்படுத்துறது?…

“ராஜா ராணி” திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா நடித்த பல திரைப்படங்கள் அவ்வளவாக வெற்றிபெறவில்லை. எனினும் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் ஆர்யாவுக்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது. ஆனால் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா நடித்த “அரண்மனை 3”, “எனிமி”, “கேப்டன்” போன்ற திரைப்படங்கள் சுமாராகவே ஓடின. தற்போது ஆர்யா, முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும், “காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஆர்யா தொடக்கத்தில் ஒரு சாக்லேட் பாய் ஆக வலம் வந்தாலும் “நான் கடவுள்” திரைப்படத்தின் மூலம் மிகச்சிறந்த நடிகராக உருமாறினார். அத்திரைப்படம் அவரது நடிப்பில் வேறு ஒரு பரிமாணத்தை வெளிகாட்டியது. அத்திரைப்படத்திற்காக ஆர்யா பட்ட கஷடங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. உடலை வருத்திக்கொண்டு அகோரியை போலவே தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடித்தார். இத்திரைப்படத்தில் ஆர்யாவின் நடிப்பு பலரையும் வியக்கவைத்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் மீசை ராஜேந்திரன், “நான் கடவுள்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் பாலா, ஆர்யாவை படாதபாடு படுத்தியதாக ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது ஆர்யா தலைகீழாக நின்று தியானம் செய்வது போல் ஒரு காட்சி படமாக்கப்பட வேண்டியதாக இருந்ததாம். ஆர்யா தலைகீழாக நிற்கும் யோக பயிற்சியை பல மாதங்களாக பயிற்சி செய்து கற்றுக்கொண்டிருந்தாராம். இந்த நிலையில் அக்காட்சி படமாக்கப்பட்டபோது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அந்த ஒரு காட்சியையே மீண்டும் மீண்டும் படமாக்கினாராம் இயக்குனர் பாலா.

ஷாட் ரெடி என்று சொன்னதும் ஆர்யா தலைகீழாக நிற்க தொடங்குவாராம். திடீரென அந்த ஷாட் சரியாக வராதாம். சில காரணங்களால் பாலாவிற்கு திருப்தியில்லாமல் போய்விடுமாம். ஆதலால் மீண்டும் மீண்டும் அந்த காட்சியை படமாக்கினாராம்.

இவ்வாறு மீண்டும் மீண்டும் படமாக்கியதால் ஆர்யா அடிக்கடி தலைகீழாக நிற்கவேண்டியதாக ஆகிவிட்டதாம். இதன் காரணத்தினால் ஆர்யாவின் கண்களில் இருந்து ரத்தம் வரத் தொடங்கிவிட்டதாம். இவ்வாறு அப்பேட்டியில் மீசை ராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உடனே துபாய்க்கு போகணும்.. ஷாமிலிக்கு வந்த பிரச்சனை.. உதவிக்கரம் நீட்டிய அஜித்!..

Arun Prasad
Published by
Arun Prasad