×

விஷாலுடன் சண்டையில் ஆர்யா... கீழே விழுந்து காயம்?

நடிகர் ஆர்யாவின் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள சார்ப்பட்டா பரம்பரை திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதனை தொடர்ந்து இவர் நடிகர் விஷாலுடன் ENEMY என்ற திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து வந்தார். அவன் இவன் படத்திற்கு பிறகு இந்த மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங்கில் ஆர்யா நடிக்கும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவர் டூப் போடாமல் நடித்த ஆர்யா, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயம் அடைந்தார்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்த கையோடு படப்பிடிப்பு தளத்துக்கு வந்து எஞ்சியுள்ள சண்டைக் காட்சிகளை நடித்துக் கொடுத்துள்ளார். மேலும் தன்னால் படப்பிடிப்பு தடைபட்டுவிடக் கூடாது என்ற காரணத்துக்காக நடிகர் ஆர்யா, வலியையும் பொருட்படுத்தாமல் நடித்துக்கொடுத்தது படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News