விஷாலை தவிர இந்த நடிகரும் நடிச்சிருக்காரா? மதகஜராஜாவா இல்ல குஜால்ராஜாவா?

by Rohini |
madhakajaraja
X

madhakajaraja

சுந்தர் சி சம்பவம்: சுந்தர் சி படம் என்றாலே கலகலப்புக்கும் காமெடிக்கும் பஞ்சமிருக்காது. உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், முறைமாமன் போன்ற எத்தனையோ படங்களை உதாரணமாக சொல்லலாம். காமெடியுடன் படத்தில் செண்டிமெண்டும் அதிகமாகவே இருக்கும். இவருடைய படங்களுக்கு என்று ஒரு தனி மவுசு இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் படமாகத்தான் சுந்தர் சி படங்கள் இருக்கும்.

12 வருட போராட்டம்:இந்த நிலையில் 12 வருடங்களுக்கு முன்பு விஷாலை வைத்து சுந்தர் சி எடுத்த படம்தான் மதகஜராஜா. 12 வருடத்திற்கு முன்பே பொங்கல் ரிலீஸாக வெளியாக வேண்டிய திரைப்படம். ஆனால் ஏதோ சில பல காரணங்களால் படம் ரிலீஸாகாமலேயே இருந்தது. ஆனாலும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேதான் இருந்தார்கள். கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆகிவிட்டன. எப்படியோ ஒரு வழியாக படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

விடாமுயற்சியால் வந்த முயற்சி:இந்த வருட பொங்கல் ரிலீஸாக படம் ரிலீஸாக உள்ளன. விடாமுயற்சி பொங்கல் ரேஸில் இருந்து வெளியேற மதகஜராஜா உட்பட 10 படங்கள் உள்ளே எண்டிரி ஆகியிருக்கின்றன. இதில் வணங்கான் திரைப்படமும் அடங்கும். சுந்தர் சிக்கு என ரசிகர்கள் இருப்பதால் மதகஜராஜா படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில் படத்தை வினியோகஸ்தர்களுக்கு படக்குழு போட்டுக் காண்பித்துள்ளது. இதில் படத்தை பார்த்த திருப்பூர் சுப்பிரமணி என்ன சொல்லியிருக்காரு பாருங்க.

படத்தை வினியோகஸ்தர்களுக்காக போட்டு காண்பித்தார்கள். 10 வருடங்களுக்கு முன்னர் எடுத்த படம்தான். அதனால் இந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப செட் ஆகுமா என்ற சந்தேகத்தில்தான் படத்தை போய் பார்த்தேன். ஆனால் மதகஜராஜா படம் இப்போதும் கனெக்ட் ஆகக் கூடிய படமாகத்தான் இருக்கிறது. படத்தில் விஷால் , சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.

arya

கேமியோ ரோலா?: கூடவே நடிகை சதாவும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். மனோபாலாவின் காமெடி பிரம்மாதமாக வந்திருக்கிறது. இன்னொரு விஷயம் என்னவெனில் இந்தப் படத்தில் நடிகர் ஆர்யாவும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அனைத்து பாடல்களும் ஃபிரஷாக இருக்கிறது என படத்தை பார்த்துவிட்டு திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். நகைச்சுவை ஜானரிலேயே படத்தை எடுத்த சுந்தர் சி சமீபகாலமாக ஹாரர் கதைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையிலும் அவர் வெற்றியடைந்துள்ளார்.

Next Story