×

ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஆர்யாவின் அடுத்த படத்தின் அதிரடி ஆரம்பம்....

நடிகர் ஆர்யா, இயக்குநர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Film_Companion_Arya_LM-Kaushik_lead_1

நடிகர் ஆர்யா துருதுருவென அனைவரையும் கவரும்  நடிகராக அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகர்.

நான் கடவுள், மகா முனி, கடம்பன், கஜினிகாந்த் என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கதையையும் வித்தியாசமாய் தேர்வு செய்யும் ஆர்யா படங்கள் எப்படி உருவாகி வந்தாலும் தம் நடிப்பையும் உழைப்பையும் அர்ப்பணிப்புடன் தருவதில் சளைத்தவரல்ல.

இறுதியாய் ஆர்யா, சயீஷா நடிப்பில் உருவாகி நேரடியாக டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் வெளியான திரைப்படம் டெடி. குழந்தைகளை கவரும் குதூகலமான டெடி கேரக்டர் இந்த படத்தில் பிரபலமானது. ஆர்யாவும் இப்படத்தில் அதிகம் பேசாத மற்றும் அறிவை பயன்படுத்தும் ஒரு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இதனிடையே விஷாலுக்கு வில்லனாக எனிமி திரைப்படத்தில் நடித்து வரும் ஆர்யா, பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் ஆர்யாவின் அடுத்த திரைப்படம் பற்றிய தகவல்களுக்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், ஒரு செம்ம தகவல் தெரியவந்துள்ளது.

ஆம், நடிகர் ஆர்யா, இயக்குநர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த படம் பற்றிய முழுமையான தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News