×

சார்பட்டா படத்தை கழுவி ஊற்றிய நபர்... அதுக்கு இப்படி பண்ணலாமா ஆர்யா?

ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ இந்த ஆர்யாவுக்கு என்னாச்சு என்று கேட்டுள்ளனர்.

 
e3addf4b-6908-4a6d-82e4-514c83b17a61

நடித்த சார்பட்டா பரம்பரை படம் அமேசான் பிரைமில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

படம் ரிலீஸாகி ஒரு மாதம் ஆகிவிட்டாலும் இன்னும் சமூக வலைதளங்களில் அது குறித்த பேச்சாகத் தான் இருக்கிறது. சார்பட்டா பரம்பரை படத்தை பாராட்டி வரும் ட்வீட்டுகளை லைக் செய்து கொண்டிருக்கிறார் ஆர்யா.

arya

அப்படி அவர் லைக் செய்த ஒரு ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ இந்த ஆர்யாவுக்கு என்னாச்சு என்று கேட்டுள்ளனர்.

அதாவது, சார்பட்டா பரம்பரை ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் மற்றும் டான்சிங் ரோஸால் தான் நன்றாக இருக்கிறது. முதல் 90 நிமிடங்கள் சிறப்பாக இருந்தாலும், அடுத்த ஒரு மணிநேரம் பாடல்கள், கத்துவது, அரசியல் சர்ச்சை என்று இழுக்கிறது, அதை கட் செய்திருக்கலாம். ஒரு முறை பார்க்கலாம் என்று ஒருவர் போட்ட ட்வீட்டை ஆர்யா லைக் செய்துவிட்டார்.

அதை பார்த்த சமூக வலைதளவாசி ஒருவரோ, தம்பி ஆர்யா நீ படிச்சிட்டு தான் லைக் போட்றியா என்று கேட்டதற்கு ஆமாம் ப்ரோ என்று பதில் அளித்திருக்கிறார். ஆர்யாவின் பதிலை பார்த்த சிலரோ, வகையாக மாட்டிக் கொண்டதும் சமாளிக்கிறார் ஆர்யா என்கிறார்கள்.

arya

From around the web

Trending Videos

Tamilnadu News