×

சார்பட்டா பரம்பரை ரிலீஸ் தேதி அறிவிப்பு.... எந்த ஓடிடி தெரியுமா?...

 
arya

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் ஆர்யா. ஆனாலும், முன்னணி கதாநாயகனாக வர முடியாமல் தவித்து வருகிறார். நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். ஆர்யா நடித்த டெடி திரைப்படம் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, இப்படத்தின் 2ம் பாகத்தின் கதையை அப்பட இயக்குனர் ஷக்தி சிதம்பரம் எழுதி வருகிறார்.

கபாலி, காலா, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை எனும் படத்தில் ஆர்யா நடித்து முடித்துள்ளார்.  இப்படம் வட சென்னையில் பிரபலமான குத்து சண்டையை மையமாக கொண்டது. இப்படத்திற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை ஏற்றி ஆர்யா நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது, 

அதுமட்டுமின்றி உலகப்புகழ் பெற்ற Rocky திரைப்படம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அந்த அளவிற்கு சார்பட்டா பரம்பரை படமும் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை. எப்போது அனுமதி கிடைக்கும் என தெரியவில்லை.

இந்நிலையில், இப்படம் நேரிடையாக அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. வருகிற 22ம் தேதி இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News