என்ன பெரிய வருண் தவான்!.. ஆர்யா தெரியுமா?.. 2 ஹீரோயின்களுடன் செம ஜாலி பண்றாரே!..
நடிகர் ஆர்யாவின் 40-வது திரைப்படமாக உருவாகி வரும் 'ஆர்யா 40' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையொட்டி ஆர்யா, நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் இணைந்து எடுத்துக் கொண்ட கலகலப்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
மலையாளத்தில் வெற்றி பெற்ற 'ப்ரணயவிலாசம்' திரைப்படத்தின் இயக்குநர் நிகில் முரளி இந்த படத்தை இயக்குகிறார். நவீன கால இளைஞர்களின் காதல், உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம், ஆர்யாவின் சூப்பர் ஹிட் படமான *'ராஜா ராணி'*யை நினைவூட்டும் வகையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ஆர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான தி ஷோ பீப்பிள் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷாவும் தயாரிப்புப் பணிகளில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யாவுடன் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இரு கதாநாயகிகளுடன் ஆர்யா பகிரும் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த காட்சிகள் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 'ராஜா ராணி' திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களில் சார்பட்டா பரம்பரை, கேப்டன், மிஸ்டர் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் ஆக்ஷன் மற்றும் தீவிரமான கதாபாத்திரங்களில் நடித்திருந்த ஆர்யா, இந்த படத்தின் மூலம் மீண்டும் முழுமையான காதல் கதைக்கு திரும்பியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு வெளியிடப்பட்ட புகைப்படங்களில் ஆர்யா, நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா மூவரும் உற்சாகமாக காணப்படுகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
