பொன்னியின் செல்வன் படத்திற்காக விஜய், மகேஷ் பாபுவுடன் நடந்த போட்டோஷூட்

அமரர் கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். மிகவும் புகழ்பெற்றர அந்த நாவலை பலரும் திரைப்படமாக எடுக்க முயன்றனர்
 
vijay

அமரர் கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். மிகவும் புகழ்பெற்றர அந்த நாவலை பலரும் திரைப்படமாக எடுக்க முயன்றனர். எம்.ஜி.ஆர் கூட முயன்றார். ஆனாலும்  அது நடக்கவில்லை. ரஜினிக்கு கூட அந்த ஆசை இருந்தது. ஒரு விழாவில் பேசிய ரஜினி, பொன்னியின் செல்வன் கதைஅயி படமாக்க வேண்டும் என்றும், அதில் நான், விஜயகாந்த், கமல்ஹாசன் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன் என்று கூறியிருந்தார்.

இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியர் இயக்குனர் மணிரத்னம். லைக்கா புரொடெக்சன் தயாரிப்பில் கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா என பெரும் நட்சத்திர பட்டாளங்களை வைத்து இரண்டு பாகங்களாக எடுத்தார். படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் சாதனை புரிந்தது. 

ponniyin selvan

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் கதையில் விஜய், மகேஷ் பாபு மற்றும் ஆர்யாவும் நடிக்க விருந்த  தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் ஆர்யா அளித்த பேட்டியில் இதனை கூறியுள்ளார். அவர் கூறியபோது,  2010களில் இப்படத்தில் தளபதி விஜய், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு மற்றும் நானும் நடிக்கவிருந்தோம். இதற்கான புகைப்படங்கள் எடுக்கும் பணியும் நடைபெற்ற நிலையில் போதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் நிதிச் சிக்கலகள் காரணமாக அப்படம் கைவிடப்பட்டது என்று கூறியிருந்தார்.
 

From Around the web