×

வழக்கம் போல ரணசிங்கம் படத்தை விமர்சித்த ப்ளுசட்ட… காண்டான இயக்குனர் சவால்!

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான க பெ ரணசிங்கம் திரைப்படத்தைக் கண்டபடி விமர்சித்த ப்ளுசட்ட மாறனுக்கு இயக்குனர் விருமாண்டி சவால் விடுத்துள்ளார்.

 

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான க பெ ரணசிங்கம் திரைப்படத்தைக் கண்டபடி விமர்சித்த ப்ளுசட்ட மாறனுக்கு இயக்குனர் விருமாண்டி சவால் விடுத்துள்ளார்.

க பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி மற்றும் டிடிஎச்சில் ரிலிஸாகி பரவலான வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார் ப்ளுசட்ட மாறன். வழக்கம் போல தன் விமர்சனத்தில் அந்த படத்தைக் கண்டபடி கிழித்தும், படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே தான் தூங்கிவிட்டேன் எனவும் தனது பாணியில் விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு பதிலளிக்கும் விதமாக படத்தின் இயக்குனர் விருமாண்டி ‘உங்களைப் போன்ற அதிமேதாவிகளுக்கு ஒரு பெண் அவள் கணவன் மேல் வைத்திருக்கும் காதலைக் காட்ட முடியாது. அது போல வெளிநாட்டுக்கு வேலைக்கு வேலைக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்படும் இளைஞர்களின் கதிக்கு யார் காரணம்?. தைரியம் இருந்தா நேரலையில் விவாதம் நடத்தலாம்’ என சவால் விடும் விதமாக கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News