'தி குட் டாக்டர்' வெப் சீரிஸின் ரீமேக் தான் ரஜினியின் 'தர்மன்'-ஆ?... அஸ்வத் மாரிமுத்து போட்ட ட்வீட்டை பாருங்க!
Dharman : கோலிவுட்டின் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் - இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் புதிய படம் 'தர்மன்'. இதில் தலைவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.
'உலக நாயகன்' கமல்ஹாசன் தனது 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' மூலம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் நேற்று தான் தொடங்கியது. இந்த படத்தில் ரஜினி டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படக்குழுவினர் வெளியிட்ட இரண்டு போஸ்டர்களிலுமே ரஜினி டாக்டர் லுக்கில் தான் இருந்தார். தற்போது, ஹாலிவுட்டில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'தி குட் டாக்டர்' என்ற வெப் சீரிஸின் ரீமேக் ரைட்ஸை கமல் வாங்கியிருப்பதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.
இதனால் இதோட ரீமேக் தான் ரஜினி நடிக்கும் 'தர்மன்' என்றும் சொல்லப்படுகிறது. தற்போது, இந்த படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எக்ஸ் தளத்தில் "இது உண்மையல்ல. பொய்யான செய்தி" என்று பதிவிட்டுள்ளார்.
Fake News ! https://t.co/VBcqVgtjQr
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) June 26, 2026
